தினகரன் 23.11.2010
பிளாஸ்டிக்கிற்கு வருகிறது தடை
..!மதுரை
, நவ. 23: மதுரை மாநகராட்சி கூட்டம் மேயர் தேன்மொழி தலைமையில் நடந்தது. இதில் நிறைவேறிய முக்கிய தீர்மானங்கள்:மதுரை நகரில் பிளாஸ் டிக் பொருட்கள் பயன்படுத்துவதால்
, மனித வாழ்வுக்கும், பாலூட்டி விலங்கினங்கள், நீர்வாழ் உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.எனவே மாநகராட்சி எல்லைக்குள்
20 மைக்கரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருள் விற்பனைக்கு தடை விதிக்கப்படுகிறது. 2011 ஜனவரி 1ம் தேதி முதல் தடை அமலுக்கு வருகிறது.மாட்டுத்தாவணி பஸ்நிலையத்தை ரூ
.4கோடியே 30லட்சத்திலும், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் வளாகத்தில் ஆம்னி பஸ் நிறுத்தும் நிலையம் ரூ.99லட்சத்து 50ஆயிரத்திலும், அண்ணா பஸ்நிலையம் ரூ.54லட்சத்திலும் அபிவிருத்தி செய்து மேம்படுத்த மொத்தம் ரூ.5கோடியே 28லட்சத்து 50ஆயிரம் அரசு அனுமதித்துள்ளது.ரிங்ரோட்டில் வாகன சுங்க கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்படுகிறது
.சிறப்புசாலை திட்டத்தின்படி தமிழகஅரசு மதுரை நகருக்கு ரூ
.33கோடியே 49லட்சம் வழங்கி உள்ளது. இதற்கான ஒப்பந்தங்களுக்கு அனுமதி அளிக்கிறது. மற்றும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேறின.மதுரையில் பிளக்ஸ் போர்டு அனுமதி வழங்கியதில் பாரபட்சம் காட்டியதாக கூறி அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்
. மார்க்சிஸ்ட் கவுன்சிலர்கள் “மாநகராட்சியில் நிதி இல்லாத நிலை யில் மேம்பாட்டு திட்டங்களுக்கு அரசு நிதி ஒதுக்கப்படவில்லை. மாநகராட்சி நடவடிக்கைகள் பாரபட்சமாக உள்ளன” என புகார் கூறி வெளிநடப்பு செய்தனர்.ஆணையாளர் செபாஸ்டின் கூறும்போது
‘பிளக்ஸ் போர்டுகளுக்கு மாநகராட்சி அனுமதி வழங்குவதில் பாரபட்சம் கிடையாது’ என்றார்.காங்கிரஸ் கவுன்சிலர் சிலுவை பேசும்போது
“முதல்வர், மத்திய அமைச்சர்கள் வருகையின் போது சாலையின் குறுக்கே வரவேற்பு வளைவோ, பிளக்ஸ் போர்டுகளோ அமைக்காமல், போக்குவரத்துக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் பெரிய அளவில் விழா நடந்தது. இது ஒரு எடுத்துக்காட்டான விழா. . இந்த மன்றத்தின் மூலம் காங்கிரஸ் சார்பில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியை பாராட்டுகிறேன்” என்றார்.