தினமணி 28.06.2010
பிளாஸ்டிக் உடல் நலனுக்குக் கேடு
நெகிழி என்று தமிழில் அழைக்கப்படும் பிளாஸ்டிக் இல்லாத தினசரி வாழ்க்கையை நினைத்துக் கூட பார்க்க முடியாது என்ற நிலைக்கு நாம் வந்து விட்டோம். இது நிதர்சனம்.
பிளாஸ்டிக்கை ஒழிப்போம் என்று கூச்சல் போடுவது, பேரணி நடத்துவது எல்லாம் நூறு சதவீத வெற்றியைத் தருகிறதா என்பது கேள்விக்குறியே! நாம் எழுதும் பேனா முதல் வானில் பறக்கும் விமானம் வரை நெகிழியின் ஆதிக்கம் கோலோச்சுகிறது.
பிளாஸ்டிக் உடல் நலத்துக்கு கேடு என்பதை விஞ்ஞானம் நிரூபித்துள்ளது. அது நிலத்தில் மக்காது, நிலத்தடி நீர் அளவை பாதிக்கும், அதை எரிப்பதால் டை ஆக்ஸின் போன்ற பல தீமை விளைவிக்கக் கூடி வாயுக்கள் வெளியேறி சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. இவை எல்லாம் தெரிந்தவைதான்.
சூடான திரவ உணவு வகைகள் காபி, பால், சாதம், சாம்பார், குருமா ஆகியவற்றை பாலிதீன் பைகள் அல்லது மெல்லிய பிளாஸ்டிக் டப்பாக்களில் சேமித்தால் நச்சுப் பொருள்கள் உணவில் ஊடுருவும். திரவ உணவுப் பொருள்களை சேமித்தால் படிம நச்சாக மெது, மெதுவாக உணவில் சேருகிறது. உப்பிட்ட பொருள்கள், ஊறுகாய்கள், புளிச்சத்து நிறைந்த பழச்சாறு இவற்றில் பிளாஸ்டிக் கலக்கிறது. பிஸ்கட், மிக்ஸர் போன்ற உலர்ந்த உணவுப் பொருள்கள்
போன்றவற்றில் நச்சு ஊடுருவல் குறைவு.
நீர், உணவைச் சேமிக்கப் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாட்டில்கள், டப்பாக்கள், பாலிதீன் பைகள் போன்றவை உணவுத் தரம் (ச்ர்ர்க் வ்ன்ஹப்ண்ற்ஹ்) உள்ளவையா என்று தெரிந்து கொண்டுதான் பயன்படுத்த வேண்டும்.
பயணம் செய்யும்போது வாங்கும் மினரல் வாட்டர் பாட்டில்கள், ஜூஸ் பாட்டில்கள் போன்றவற்றை நாம் வீட்டுக்குக் கொண்டு வந்து உபயோகிக்கிறோம்.
காலி பாட்டிலை லேசாக அமுக்கிப் பார்ப்போம். நசுங்கினால் தூக்கிப் போட்டு விடுவோம். கெட்டியாக இருந்தால் அதைப் பாதுகாத்து மறுபடியும் பயன்படுத்துகிறோம்.
இந்த பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்துவதில் ஆபத்து இருக்கிறது. பாட்டிலை கவிழ்த்து அடியில் பார்த்தால் கீழ்க் கண்ட குறியீடுகள் இருக்கும். சில எண்கள், சில எழுத்துக்கள்.
இவற்றுக்கான விளக்கம்
1 பாலி எதிலீன் டெரிபாலேட் டஉபஉ
2. அடல் பாலிஎதிலீன் ஏஈடஉ
3. பிளாஸ்டிக் ஆக்கப்படாத பாலிவினைல் குளோரைடு டயஇ
4. அடர்த்தி குறைந்த பாலி எதிலீன் கஈடஉ
5. பாலிப் ரொபிலீன் டட
6. பாலிஸ்டெரின் அல்லது விரிவடையும் பாலிஸ்டெரின் டந
7. பாலி கார்போனேட் (டஇ ஹய்க் ர்ற்ட்ங்ழ்ள்)
பழச்சாறு, குடிநீர், மென்பான பாட்டில்கள் டஉபஉ – யால் தயாரிக்கப்படுகின்றன.
பால் பாட்டில், குடிநீர் பாட்டில் நீர் ஜக்கு போன்றவை ஏஈடஉ– யால் தயாரிக்கப்படுகின்றன.
குடிநீர் ஜக்கு, சமையல் எண்ணெய் ஆகியவை டயஇ யால் தயாரிக்கப்படுகின்றன.
யோகர்ட் எனப்படும் தயிர் சிரப் பாட்டில்கள் டட –யால் தயாரிக்கப்படுகின்றன.
சில வகை பிளாஸ்டிக் பொருள்களிலிருந்து நச்சுத்தன்மையும், வேதியியல் பொருள்களும் ஊடுருவி நமது குடிநீரில், பழச்சாறில் உணவில் கலந்துவிடும் ஆபத்து உள்ளது.
இவற்றில் கிட்டத்தட்ட எல்லாமே அதிகக் கெடுதல் செய்பவைதான்.
இந்தப் பொருள்கள் படிம நச்சுக்கள் போல் உடலில் ஆபத்தை விளைவிக்கின்றன. இந்த நச்சுக்களால் இதய நோய்கள், சர்க்கரை நோய், புற்று நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் மிக அதிகம்.
விலங்குகளிடம் நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளில், இவை நாளமில்லா சுரப்பி பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஆண்ள்ல்ப்ங்ய்ர்ப்–அ என்பது நெகிழி தயாரிக்க உதவும் வேதியியல் பொருள். பழச்சாறு பாட்டில்கள், குழந்தைகளுக்கான பால் பாட்டில்கள் தயாரிக்க இது பயன்படுத்தப்படுகிறது. இது மிகவும் ஆபத்தான சூழ்நிலை அல்லவா?
காரில் பிளாஸ்டிக் பாட்டிலில் குடிநீர் வைத்துப் பயன்படுத்தினால் காருக்குள் ஏற்படும் கதிரியக்கமும் சேர்ந்து மகளிருக்கு கருப்பை வாய் புற்று நோய் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.
பிளாஸ்டிக் பாட்டில்கள்– டப்பாக்களில் குடிநீர், ஜூஸ், உணவுப் பொருள்களை அடைத்து வைப்பதைத் தவிர்க்க வேண்டும். பாட்டில்களின் அடியில் உள்ள எண்ணைக் கவனித்து அன்றாட வீட்டு உபயோகத்துக்கு பாலி எதிலீன் டெரிபாலேட், அடல் பாலிஎதிலீன், பாலிஸ்டெரின் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். பாலிகார்பனேட்– பிசி (7) வகை பிளாஸ்டிக்குகள் ஓரளவு பாதுகாப்பானவை.