தினமணி 26.09.2013
தினமணி 26.09.2013
பிளாஸ்டிக் கழிவுகளை தூளாக்கும் இயந்திரம் இயக்கம்
ஆலங்காயம் பேரூராட்சியில் பிரித்தெடுக்கப்படும்
பிளாஸ்டிக் கழிவுப் பொருள்களை மறுசுழற்சி செய்து பயன்படுத்தும் விதமாக
அவற்றை தூளாக்கும் இயந்திரம் இயக்கப்பட்டுள்ளது. இதை செயல் அலுவலர்
வே.கோபாலன் செவ்வாய்க்கிழமை இயக்கிவைத்தார்.
வேலூர் மாவட்டத்திலேயே முதல்முறையாக ரூ.1 லட்சம் மதிப்பிலான இந்த இயந்திரம் ஆலங்காயம் பேரூராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.
பேரூராட்சி மன்றத் தலைவர் மஞ்சுளா கந்தன், துணைத் தலைவர் பாண்டியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.