தினமலர் 26.03.2013
பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சி மையம் அமைக்க அழைப்பு
கரூர்: பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி மையங்கள் அமைக்க, மகளிர் சுயஉதவிக்குழுக்கள் விண்ணப்பிக்கலாம், என கலெக்டர் ஜெயந்தி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:
கரூர் மாவட்டத்தில் சுற்றுச்சூழலை காப்பதற்காக, பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்து, பிளாஸ்டிக் தார் சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறன. பல்வேறு மாவட்டங்களில் மகளிர் சுயஉதவி குழுக்கள் மூலம் பிளாஸ்டிக் மறுசுழற்சி மையங்கள் அமைக்கப்பட்டு, வெற்றிகரமாக இயங்கி வருகிறது.
அதன் அடிப்படையில், கரூர் மாவட்ட மகளிர் சுயஉதவி குழுக்களின் கூட்டமைப்பு மூலம், பிளாஸ்டிக் மறுசுழற்சி மையம் அமைக்க தேவையான உதவிகள் செய்யப்படுகிறது. விருப்பமுள்ள கூட்டமைப்புகள் மகளிர் திட்ட அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.