பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வு முகாம்
போளூர் பேரூராட்சியில் அமைதி அறக்கட்டளை மற்றும் பேரூராட்சி சார்பில் பிளாஸ்டிக் தீமைகள் குறித்த விழிப்புணர்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு பேரூராட்சி மன்றத் தலைவர் பாபு தலைமை வகித்தார். பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் செல்வன், செயல் அலுவலர் நிஷாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அமைதி அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் ராஜாராம் பேசும்போது, “புற்றுநோய், குழந்தை பிறப்புக் கோளாறு, மரபுத் தன்மை மாற்றம், மூச்சுக் குழாய் அடைப்பு, கண்களில் எரிச்சல், தோல் நோய்கள், சுவாச சிக்கல் என பல்வேறு நோய்களுக்கு காரணமாக பிளாஸ்டிக் விளங்குகிறது. இதனால் துணிப்பையை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் என்றார்.
இளநிலை உதவியாளர் பன்னீர்செல்வம், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ஜெயவேல், கவுன்சிலர்கள் சுந்தர், பார்த்திபன், லட்சுமி ஏழுமலை மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.