தினமணி 09.05.2013
பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் தடை செய்யப்பட்ட 350 கிலோ பிளாஸ்டிக் பைகள் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நகராட்சியில் 40 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் கப், டம்ளர், தெர்மோகோல் பிளேட், கேரிபேக் கடந்த தடைசெய்யப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நகராட்சி ஆணையாளர் முகம்மது முகைதீன் உத்தரவின்படி துப்புரவு ஆய்வாளர் திண்ணாயிரமூர்த்தி மற்றும் அலுவலர்கள் 50க்கும் மேற்பட்ட கடை மற்றும் நிறுவனங்களில் ஆய்வு செய்து 350 கிலோ பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர். மேலும் அபராதம் விதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.