தினமணி 26.04.2013
பிளாஸ்டிக் விழிப்புணர்வு முகாம்
ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் முதல்நிலை பேரூராட்சி மற்றும் அமைதி அறக்கட்டளை சார்பில் பிளாஸ்டிக்கின் தீமைகள் குறித்த விழிப்புணர்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு, கண்ணமங்கலம் பேரூராட்சி நிர்வாக அலுவலர் வசந்தா தலைமை தாங்கினார். அமைதி அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் ராஜாராம் வரவேற்றார். பேரூராட்சித் தலைவர் கோவர்த்தனன், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்து பேசினார்.
போளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் ஜெயவேல், வியாபாரிகள் குமரன், பெருமாள்ராஜா, மூர்த்தி, சையத்இப்ராஹிம், வார்டு கவுன்சிலர்கள் பச்சைமுத்து, ரேவதி, சுரேஷ்பாபு, சாரங்கபாணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.