தினத்தந்தி 29.11.2013
புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

லால்குடியில்
நடந்த புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை
பேரூராட்சி தலைவர் சுதாராணி தலைமை வகித்து கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை கரோலின், வட்டார மருத்துவ
அலுவலர் பிரபா முன்னிலை வகித்தனர். ஊர்வலத்தில் வட்டார சுகாதார
மேற்பார்வையாளர் மூக்கன், மருத்துவ வள மேற்பார்வையாளர் சாமிதுரை, சுகாதார
ஆய்வாளர் செந்தில் ஆனந்த், சமுதாய சுகாதார செவிலியர் ஜெயலட்சுமி உள்பட பலர்
கலந்து கொண்டனர். புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளியிலிருந்து தொடங்கிய
ஊர்வலம் முக்கிய வீதி வழியாக சென்று காந்தி சிலையில் முடிவடைந்தது.
முன்னதாக சுகாதார ஆய்வாளர் பாண்டியன் வரவேற்றார். நிறைவில் சுகாதார
ஆய்வாளர் லட்சுமணன் நன்றி கூறினார்.