தினமலர் 24.08.2010
புஞ்சை தோட்டக்குறிச்சியில் சாலை சீரமைக்க டவுன் பஞ்.,கூட்டத்தில் தீர்மானம்
கரூர்: கரூர் மாவட்டம், புஞ்சை தோட்டக்குறிச்சி டவுன் பஞ்சாயத்து கூட்டம் தலைவர் சக்திவேல் தலைமையில் நடந்தது.துணைத் தலைவர் ரமேஷ், செயல் அலுவலர் கிருஷ்ணசாமி முன்னிலை வகித்தனர்.நடப்பு 2010-11ம் ஆண்டுக்கான சிறப்பு திட்டத்தின் கீழ் டவுன் பஞ்சாயத்து பகுதிகளில் உள்ள பஸ் செல்லும் சாலை, வழிபாட்டு தலங்களுக்கு செல்லும் சாலை, பொதுமக்கள் பயன்படுத்தும் மிக முக்கியமான சாலை தேர்வு செய்து, அவற்றை சீரமைக்க விரிவான திட்ட கருத்துரு அறிக்கை சமர்ப்பிப்பது.
கிழக்கு தவிட்டுப்பாளையம் தலைமை குடிநீரேற்று நிலையத்தில் பழுதடைந்த மின் மோட்டாரை சரி செய்வது. தளவாபாளையம் குப்பை கிடங்கு அருகில், பழுதடைந்த மினி பவர் பம்பு, 1.5 ஹெச்.பி., மோட்டாரை சரி செய்வது. அங்கு மயானத்தில் மின்விளக்கு அமைப்பது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.