தினமலர் 28.04.2010
புதிய இடத்திற்கு சென்ட்ரல் மார்க்கெட் மாறும் எப்போது: டெபாசிட் தொகையில் ஏற்பட்டது உடன்பாடு
மதுரை: டெபாசிட் தொகையை நிர்ணயிப்பதில் மாநகராட்சி – வியாபாரிகள் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளதால், புதிய இடத்திற்கு சென்ட்ரல் மார்க்கெட் இடம் மாறுவது உறுதியாகி உள்ளது.மதுரை நகரின் அழகைக் கெடுத்து, சுகாதார கேட்டை ஏற்படுத்தி, போக்குவரத்துக்கும் நெருக்கடியைத் தரும் சென்ட்ரல் மார்க்கெட்டை இடம் மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்தது. ஒரு வழியாக இப்பிரச் னையை தீர்க்கும் வகையில், மாட்டுத்தாவணிக்கு சென்ட்ரல் மார்க்கெட், இடம் மாற்றப்படஉள்ளது. சென்ட்ரல் மார்க்கெட் டில் உள்ள கடைகளின் ஏல காலம் முடிந்து, தற்போது மாநகராட்சியே வாடகையை வசூலிக்கிறது. இப்போது சென்ட்ரல் மார்க்கெட்டில் உள்ள கடைகளுக்கு, அளவைப் பொறுத்து, மாதம் 200 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை வாடகை வசூலிக்கப்படுகிறது.
புதிய இடத்திற்கு டெபாசிட் மற்றும் மாத வாடகை தொகை அதிகம் என வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், பலமுறை இத்தொகை மாற்றி அமைக்கப்பட்டது. கடைசியாக கிடைத்த தகவலின்படி, பெரிய கடைகளுக்கு 60 ஆயிரம் ரூபாய், சிறு கடைகளுக்கு 40 ஆயிரம் ரூபாய், தரை கடைகளுக்கு 50 ஆயிரம் ரூபாய் டெபாசிட் தொகை என முடிவாகி உள்ளது. இத்தொகையை வியாபாரிகள் பெயரளவிற்கு ஏற்று உள்ளனர். கடையின் அளவைப் பொறுத்து, மாத வாடகை, 2500, 2000, 1500, 1000 ரூபாய் என முடிவாகி உள்ளது.
80 சதவீத பணி: மாட்டுத்தாவணியில் உருவாகும் புதிய காய்கறி மார்க்கெட்டில் 80 சதவீத கட்டுமான பணிகள் முடிந்து விட்டன. தற்போது சாலை, உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்கும் பணி நடக்கிறது. 8 கோடி ரூபாய் மதிப் பீட்டில் சென்ற ஆண்டு துவங்கிய இப்பணிகள் சென்ற ஜனவரியில் முடியும் என எதிர்பார்க்கப்பட் டது. இப்பணிகள் முடியாமல் நீடித்ததால் செலவு 12 கோடி ரூபாயை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெபாசிட் தொகையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதால், அடுத்த மாதம் இறுதி அல்லது ஜூன் மாத துவக்கத்தில் புதிய மார்க்கெட் செயல்படத் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.