புதிய குடிநீர் இணைப்புக்கு விண்ணப்பிக்க அழைப்பு
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 4வது மண்டலப் பகுதிகளில்புதிய குடிநீர் இணைப்புக்கு ‘டெபாசிட்’ தொகை செலுத்தியவர்கள் வருகிற 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கமிஷனர் செல்வராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
திருப்பூர் மாநகராட்சிக்கு உள்பட்ட 4வது மண்டலத்தை சேர்ந்த வீரபாண்டி, முருகம்பாளையம், ஆண்டிபாளையம் பகுதிகளில் புதிதாக குடிநீர் இணைப்புப் பெற வைப்புத் தொகை செலுத்தியவர்கள், அதற்கான ரசீது, 2013-14ம் ஆண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்து வரி (கட்டடத்திற்கு) செலுத்திய ரசீது நகலுடன் வரும் 15ம் தேதிக்குள் 4வது மண்டல அலுவலகத்தில் விண்ணப்பம் கொடுக்க வேண்டும். ஏற்கனவே வைப்புத்தொகை செலுத்தப்பட்ட தேதி அடிப்படையில் இந்த விண்ணப்பங்கள் வரிசைப்ப டுத்தப்பட்டு, மாநகராட்சி குடிநீர் வழங்கல் துணை விதிகளின்படி கூடுதல் வைப்புத் தொகை செலுத்துவோருக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.