தினகரன் 04.09.2010
புதிய சென்ட்ரல் மார்க்கெட் செயல்பட தொடங்கியது
மதுரை
, செப். 4: புதிய சென்ட்ரல் மார்க்கெட் முழுமையாக செயல்பட தொடங்கியது. தக்காளி, சீமைக்காய் வியாபாரிகள் கடைகளுக்கு மாத வாடகையே வசூலிக்க வேண்டும், மீண்டும் ஏலத்துக்கு விட்டு தினசரி வாடகை வசூலிக்க கூடாது என கோரி உள்ளனர்.மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகில்
104 ஆண்டுகளாக இயங்கி வந்த, சென்ட்ரல் மார்க்கெட் கடந்த 1&ந் தேதி மாட்டுத் தாவணிக்கு மாற்றப்பட்டது. இங்குள்ள 524 கட்டிட கடைகள், 1090 தரைக் கடைகள் அமைந்துள்ளன. மார்க்கெட் நேற்று முதல் முழுமையாக செயல்பட துவங்கியது. ஒதுக்கீடு ஆகாத கடைகளும், மின் இணைப்பு பெறாத கடைகள் மட்டுமே மூடிக் கிடக்கின்றன.வியாபாரிகள் கூறும் போது
“பழைய மார்க்கெட் நெருக்கடியாக இருந்தது. புதிய மார்க்கெட் பெரிய இடத்தில் விசாலமாக அமைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. குடிநீர், கழிப்பிடம், பாதுகாப்பு விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்” என்றனர்.தக்காளி
, சீமைக்காய் வியாபாரிகள் சங்க தலைவர் நீலமேகம், செயலாளர் மீனாட்சிசுந்தரம், பொருளாளர் சேதுராமன், ராதாகிருஷ்ணன், சேகர், மலைச்சாமி, கருப்பையா, ஜெயக்குமார் உள்பட வியாபாரிகள் மாநகராட்சி அலுவலகத்திற்கு நேற்று திரண்டு வந்து ஆணையாளர் செபாஸ்டினிடம் கோரிக்கை மனு அளித்தனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது:& எங்களுக்கு 70 பெரிய கடைக்கு ரூ. 2 லட்சம் டெபாசிட், ரூ. 4 ஆயிரம் மாத வாடகை, 61 சிறிய கடை ரூ. 75 ஆயிரம் டெபாசிட், ரூ. 1000 மாத வாடகை நிர்ணயிக்கப்பட்டது. டொபாசிட் மொத்தம் ரூ. 1 கோடி, 85 லட்சத்து 75 ஆயிரம் ஆணையாளர் பெயரில் டி.டி. எடுத்துள்ளோம்.எங்களுக்கு மத்திய அமைச்சர் மு
.க.அழகிரி தெரிவித்தபடி, மாத வாடகை அடிப்படையில் கடை ஒதுக்கீடு இருக்க வேண்டும். மீண்டும் ஏலத்துக்கு விட்டு, தினசரி வாடகை முறை கூடாது.வியாபாரம் தொடங்கியுள்ள தரை கடைகளில் சகதியாகி விடுகிறது
. எனவே மேற்கூரையும் தரையில் தளமும் அமைத்து தர வேண்டும். இவ்வாறு கோரினர்.