தினகரன் 02.09.2010
புதிய பஸ் நிலையத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க நடவடிக்கை
நெல்லை, செப்.2: நெல்லை புதிய பஸ் நிலையத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க நேற்று இரு இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டன.
நெல்லை புதிய பஸ் நிலையத்தில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால் பயணிகள் குடிக்க அங்கு போதுமான குடிநீர் இல்லை. அங்கு ஓட்டல்களில் கூட கழிவறை தண்ணீர் பயன்படுத்தப்பட்டு வந்தது.
இதுகுறித்து மாநகராட்சிக்கும் பல்வேறு புகார்கள் சென்றன. மாநகராட்சி கமிஷனர் சுப்பையன், புதிய பஸ் நிலையத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில் அங்கு நேற்று இரவில் நாகர்கோவில் பஸ்கள் நிறுத்தும் இடத்திலும், தென்காசி பஸ்கள் நிறுத்தும் இடத்தில் இரு ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டன.
அதில் இருந்து குழாய்கள் பதிக்கப்பட்டு, பஸ் நிலையத்தில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட உள்ளது. அந்த தண்ணீரை சுத்தப்படுத்தி பொதுமக்களுக்கு வழங்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
கயத்தாரில் பிளாஸ்டிக் ஒழிப்பு தினம்
கயத்தார், செப். 2: கயத்தார் அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் பிளாஸ்டிக் பைகளை அகற்றினர்.
கயத்தார் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் பேரூராட்சி சார் பில் ஒரு நாள் பிளாஸ்டிக் ஒழிப்பு தினம் நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியை சௌந்திரநாயகி தலைமை வகித்தார். கயத் தார் பேரூராட்சி நிர்வாக அதிகாரி மூக்கன் முன் னிலை வகித்தார். பள்ளி வளாகம் மற்றும் கயத்தார் நகரின் முக்கிய வீதிகளில் அரசு மேல்நிலைப்பள்ளி என்.எஸ்.எஸ் மாணவர் கள் மற்றும் பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் பிளாஸ்டிக் பைகளை அகற்றி சுத்தப்படுத்தினர். 65 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு பேரூராட்சி நிர்வாக அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது. ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ். திட்ட அலு வலர் ராஜேந்திரன் செய்தார்.