தினமலர் 10.03.2010
புதிய வடிவில் மாநகராட்சி பிறப்பு சான்று போலியை ஒழிக்க முதல் முறையாக ‘ஹாலோகிராம்‘
தூத்துக்குடி : தூத்துக்குடி மாநகராட்சியில் முதல், முதலாக பிறப்பு சான்றிதழில் புதிய மாறுதல் கொண்டுவரப்பட்டுள்ளது. மாநிலத்தில் வேறு எங்கும் இல்லாத வகையில் பிறப்பு சான்றில் போலியை ஒழிக்க ஹாலோகிராம் ஒட்டப்படுகிறது. தூத்துக்குடி மாநகராட்சியில் தற்போது பிறப்பு, இறப்பு சான்றுகள் மாநகராட்சி எம்பளம் வைக்கப்பட்ட சாதாரண வெள்ளைத்தாளில் அச்சடித்து கொடுக்கப்பட்டு வந்தது. இதனால் சான்றுகள் கிடைப்பதில் காலதாமதம் ஆகி வந்ததாக கூறப்பஇது குறித்து மாநகராட்சி கமிஷனர் கூறியதாவது; தூத்துக்குடி மாநகராட்சியில் பிறப்பு, இறப்பு சான்றுகளில் புதிய முறையை புகுத்துகிறோம். இதற்காக மதுரை மாநகராட்சியில் உள்ளது போன்று பிறப்பு, இறப்பு சான்று அச்சடிக்கப்படுகிறது. ஒவ்வொன்றுக்கும் ஒரு சீரியல் நம்பர் ஏற்கனவே போடப்பட்டிருக்கும். இதனால் ஒரு நாளைக்கு எத்தனை சான்றுகள் அளிக்கப்படுகிறது என்பதை உடனுக்குடன் அறிய முடியும்.
அத்துடன் பிறப்பு, இறப்பு சான்று சம்பந்தமாக வெரிபிக்கேஷனுக்கு பல ஆண்டுக்கு பிறகு வந்தால் அதன் சீரியல் நம்பரை வைத்து எளிதாக அதன் விபரத்தை அறியும் வாய்ப்பு கிடைக்கிறது. அத்துடன் பிறப்பு, இறப்பு சான்று பல ஆண்டுகளுக்கு இருக்க வேண்டும் என்பதால் மிகவும் திக்கான பேப்பரில் இதனை வழங்கும் வகையில் நடவடிக்கை எடுத்திருக்கிறோம். பள்ளிகளில் முதல் வகுப்பில் சேர வேண்டும் என்றால் பிறப்பு சான்று கண்டிப்பாக வேண்டும்.
இதனால் ஜூன் மாதத்தில் பள்ளியில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் பிறப்பு, இறப்பு சான்றுக்கு வருவர். முன் கூட்டியே தூத்துக்குடி மாநகராட்சி மக்கள் பிறப்பு, இறப்பு சான்றினை பெற்றுக் கொள்ளும் வகையில் சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளோம்.5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பிறப்பு சான்று ஏப்ரல், மே ஆகிய இரண்டு மாதங்கள் தூத்துக்குடி மாநகராட்சியில் இலவசமாக வழங்கப்படுகிறது. விண்ணப்பம் செய்து இரண்டு நாளில் பிறப்பு சான்று உடனடியாக வழங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. கடைசி நேர கூட்டத்தை தவிர்க்க இந்த பகுதி மக்கள் முன் கூட்டியே பிறப்பு சான்றினை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். இரண்டு மாதத்திற்கு மட்டும் தான் இலவசம். அதன் பிறகு கட்டணம் செலுத்த வேண்டும்.பிறப்பு, இறப்பு சான்றில் பல்வேறு விபரங்கள் ஏற்கனவே அச்சடிக்கப்பட்டு தயார் நிலையில் இருப்பதால் மிக விரைவாக காலதாமதம் இல்லாமல் அதனை வழங்குவதற்கு வாய்ப்பு ஏற்படும். இவ்வாறு குபேந்திரன் தெரிவித்தார். இரண்டு மாதங்கள் இலவசமாக பிறப்பு சான்று குழந்தைகளுக்கு கிடைப்பதால் இந்த வாய்ப்பை தூத்துக்குடி மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.