தினமணி 07.04.2010
புதுச்சேரி, உழவர்கரை நகராட்சிகளை இணைத்து புதிய மாநகராட்சி
புதுச்சேரி, ஏப். 6: புதுச்சேரி, உழவர்கரை நகராட்சிகளை இணைத்து மாநகராட்சியாக உயர்த்த ஆய்வு செய்யப்படும் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் கூறினார்.
சட்டப்பேரவையில் அவர் வெளியிட்ட அறிவிப்பு விவரம்:
பாரம்பரிய கட்டடமான மேரி ஹால் மறுசீரமைப்பு செய்யப்படும். வருமானம் குறைவாக உள்ள அனைத்து கொம்யூன் பஞ்சாயத்துகளையும் வருமானம் அதிகமாக உள்ள கொம்யூன் பஞ்சாயத்துகளோடு இணைத்து நகராட்சிகளை உருவாக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.
ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை தனியார் பங்களிப்போடு காரைக்காலில் செயல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார் அமைச்சர்.