தினமணி 04.04.2013
புதுப்பிக்கப்பட்ட குடிநீர் தொட்டி திறப்பு
திருக்கனூர் அருகே ரூ.9 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட குடிநீர்த் தொட்டி, மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து விடப்பட்டது.
திருக்கனூரை அடுத்த கூனிச்சம்பட்டு அய்யனார் கோயில் அருகே பழுதடைந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியைச் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து இங்கு ரூ.9 லட்சத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதையடுத்து, புதுப்பிக்கப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை பேரவை துணைத் தலைவர் டி.பி.ஆர்.செல்வம் தொடங்கி வைத்தார்.ஊர்ப் பிரமுகர்கள் நடராஜன், ராமச்சந்திரன், கலியபெருமாள உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.