தினமணி 21.04.2010
புதை சாக்கடைத் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க புதிய தமிழகம் வலியுறுத்தல்
திருவாரூர், ஏப். 20: திருவாரூரில் நடைபெற்று வரும் புதைசாக்கடைத் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
திருவாரூரில் நடைபெற்ற கட்சியின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், மதுரை விமான நிலையத்துக்கு தியாகி இமானுவேல் தேவேந்திரர் பெயர் சூட்ட வலியுறுத்தி மே. 6-ம் தேதி கட்சியின் நிறுவனர் க. கிருஷ்ணசாமி தலைமையில் நடைபெறவுள்ள உண்ணாவிரதத்தில் திருவாரூர் மாவட்டத்திலிருந்து திரளானோர் பங்கேற்க முடிவு செய்யப்பட்டது.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டங்களுக்கு புதிய தமிழகம் கட்சியை அழைக்க மறுக்கும் மாவட்ட நிர்வாகத்தை வன்மையாகக் கண்டிப்பது, புதிய தமிழகம் கட்சியின் கொடியை வேறு யாரேனும் பயன்படுத்தினால், காவல்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுப்பது, தஞ்சாவூர் – நாகை இடையே நான்கு வழிச்சாலை திருவாரூர் நகருக்குள் வந்தால் ஏழை, எளிய மக்கள், சிறு வர்த்தகர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாவார்கள். எனவே, இந்த விரிவாக்கத்தை மாற்றுப் பாதையில் செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன