தினமணி 06.03.2010
புத்தர் தெரு நகராட்சி பள்ளி ஆண்டு விழா
பவானி, மார்ச், 5. குமாரபாளையம் புத்தர் தெரு நகராட்சி நடுநிலைப் பள்ளியின் 107-வது ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது.
விழாவுக்கு, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வி.வாசுதேவன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் பிஎஸ்பி.சந்திரன், பொருளாளர் சிவசக்தி கே.சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியை வி.முத்தமிழ்ச்செல்வி வரவேற்றார்.
தொடக்கக் கல்வி அலுவலர் இளங்கோவன் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்குப் பரிசுகள் வழங்கிப் பேசினார் (படம்). பள்ளியில் 100 சத வருகை புரிந்த 20 மாணவ, மாணவியருக்கும், முதல் மதிப்பெண்கள் பெற்ற 16 பேருக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
நிர்வாகிகள் சுகன்ராஜ், மாதேஸ்வரன், சக்திவேல், மகேந்திரன், தண்டபாணி, நாச்சிமுத்து குருசாமி, என்.ஜெகதீஸ், கிராம கல்விக்குழுத் தலைவர் முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.