தினமணி 25.11.2010
புத்தூர் ஆறுகண் பாலம்: மேயர், ஆணையர் ஆய்வுதிருச்சி, நவ. 24: தொடர்ந்து பெய்துவரும் மழையை அடுத்து, புத்தூர் ஆறுகண் பாலப் பகுதியில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கைப் பணிகளை மேயர் எஸ். சுஜாதா, ஆணையர் த.தி. பால்சாமி ஆகியோர் புதன்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
புறநகர்ப் பகுதிகளில் இருந்து கோரையாறு, அரியாறு மற்றும் உய்யகொண்டான் வாய்க்கால் வழியாக மழைநீர் புத்தூர் ஆறுகண்ணை வந்தடைந்து பிறகு குடமுருட்டி, உய்யகொண்டான் வழியாக காவிரியில் கலக்கிறது.
இந்நிலையில், கடந்த சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், மழை நீரின் அளவு உயர்ந்துள்ளது. இதை மேயர் மற்றும் ஆணையர் நேரில் பார்வையிட்டனர். இந்த ஆய்வின்போது நகரப் பொறியாளர் எஸ். ராஜா முகம்மது, செயற்பொறியாளர் ஆர். சந்திரன், உதவி ஆணையர் வி. நடராஜன், உதவிச் செயற்பொறியாளர் எஸ். நாகேஷ், இளநிலைப் பொறியாளர் ராஜேஷ்கண்ணா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.