தினகரன் 26.11.2010
பூமார்க்கெட் ஏலம் ஒத்திவைப்பு
கோவை, நவ. 26: பூமார்க்கெட் ஏலம் விடுவது 1ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. கோவை மேட்டுப்பாளை யம் ரோட்டில் நவீன வசதிக ளுடன் புதிதாக பூ மார்க்கெட் கட்டப்பட்டது. ஆனால், புதிய மார்க்கெட் கடைக ளுக்கு செல்ல பூ வியாபாரி கள் மறுத்து விட்டனர். கடை கள் ஒதுக்கீடு சரியாக இருக் காது. முன்னால் உள்ள கடை களுக்கு அதிக வியாபாரம் நடக்கும்.
பழைய கடைகள் இருக் கும் இடமே சரியாக இருக்கும் என வியாபாரிகள் கருத்து தெரிவித்தனர். பின்னர், அதிகாரிகள் பல முறை நடத்திய பேச்சு வார்த்தையில் உடன் பாடு ஏற்பட்டது. இருப்பி னும் கடைகளை மொத்தமாக ஒப்பந்த முறையில் விட்டால் பிரச்னை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டது.
புதிய பூ மார்க்கெட்டில் 45 கடைகள் இருக்கிறது. கடை வாரியாக தனித்தனியாக நேற்று மின் ஏலம் நடத்தி ஒப்படைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், மாநகராட்சி நிர்வாகம் மின் ஏலத்தை திடீரென ஒத்தி வைத்தது. மாநகராட்சி உதவி கமிஷனர் ஜெயச்சந்திரன் கூறுகையில், ” நிர்வாக வசதிக்காக டிசம்பர் 1ம் தேதி கடை ஏலம் விடப்படும் என அறிவித்திருக்கி றோம். இந்த தகவல் அறிவிப்பு பலகை செய்தி மூலமாக வியாபாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது,” என்றார்.