தினகரன் 04.09.2010
பெங்களூர் மாநகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு கூடுதல் அதிகாரம்
பெங்களூர்
, செப்.4: உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கவேண்டுமென்று பெங்களூர் மாநகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட் டது. மாநகராட்சியில் பட்ஜெட் மீதான விவாதம் நேற்று மேயர் நடராஜ் தலைமையில் நடந்தது.அப்போது மஜத தலைவர் பத்மநாபரெட்டி மக்கள் பிரதிநிதிகளை காட்டிலும்
, அதிகாரிகளிடம் தான் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று ஆதங்கம் வெளிப்படுத்தினார்.பத்மநாபரெட்டியின் கருத்துக்கு மாநகராட்சி ஆளும் கட்சி தலைவர் சத்யாநாராயணா பதிலளக்கும்போது
, மக்கள் பிரதிநிதிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் உள்ளாட்சி அமைப்பு சட்ட விதி 74ல் திருத்தம் செய்ய கே.சந்திரசேகர் மேயராக இருந்த சமயத்தில் முயற்சி மேற்கொண்டு மாநில அரசுக்கு சிபாரிசு செய்யப்பட்டது.இதை கவனத்தில் கொள்ளால் அரசு தரப்பில் திருப்பி அனுப்பபட்டது என்றார்
.அப்போது கூட்டத்தில் இருந்த முன்னாள் மேயர் சந்திரசேகர் எழுந்து
, மக்கள் பிரதிநிதிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் சட்டத்தை திருத்தி மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டிய அவசியமில்லை.மாநில அரசே தனது அதிகாரத்தை பயன்படுத்தி வழங்க முடியும் என்றார்
.அப்போது குறுக்கிட்டு பேசிய எதிர்க்கட்சி தலைவர் எம்
.நாகராஜ் எழுந்து மாநகராட்சி உருவாக்கப்பட்டது மக்கள் பிரதிநிதிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே. பெஸ்காம், பொதுப்பணி, குடிநீர் வாரியம், போலீஸ் உள்பட முக்கிய துறைகளை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து, மக்கள் பிரதிநிதிகளுக்கு அதிகாரம் கொடுக்க வேண்டியது அவசியமாகும். ஆனால் இது போன்ற அதிகாரம் கொடுத்தால், மாநகராட்சி தனித்தன்மை பெற்று விடும் என்பதால், மாநில அரசு கொடுக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.அப்போது குறுக்கிட்ட ஆளும் கட்சி தலைவர் கட்டா சத்யா நாராயணா
, இம்முறை சட்டத்திருத்தம் செய்து மாநில அரசின் மூலம் மத்திய அரசுக்கு அனுப்பப்படும். இவ்வாறு அவர் கூறினார்.