பெங்களூர் வளர்ச்சி குறித்து முதல்வர் சித்தராமையாவுடன் ஆலோசிப்பேன்: மேயர் வெங்கடேஷ்மூர்த்தி
பெங்களூர் வளர்ச்சி குறித்து முதல்வர் சித்தராமையாவுடன் ஆலோசனை நடத்தப்படும் என்று மேயர் வெங்கடேஷ்மூர்த்தி தெரிவித்தார்.
பெங்களூரில் வியாழக்கிழமை மாநகர மாமன்ற கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் இவ்வாறு கூறினார். மேலும் அவர் கூறியது, முதல்வர் சித்தராமையாவை ஏற்கெனவே சந்தித்து மாமன்ற உறுப்பினர்கள் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் அவரை சந்தித்து பெங்களுர் மாநகர வளர்ச்சி குறித்து ஆலோசிக்கப்படும். ஆலோசனையில் அடிப்படை கட்டுமானப் பணிகள், குப்பை, குடிநீர் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படும் என்றார். முன்னதாக மாமன்ற கூட்டத்தில் ஆளும்கட்சித்தலைவர் நாகராஜ், எதிர்க்கட்சித்தலைவர் குணசேகர் ஆகியோர் முதல்வர் சித்தராமையா, பெங்களூரைச் சேர்ந்த அமைச்சர்கள் ராமலிங்கரெட்டி, கே.ஜே.ஜார்ஜ், தினேஷ்குண்டுராவ், கிருஷ்ணேபைரேகெüடா, சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள மாமன்ற உறுப்பினர்கள் முனிராஜ், பைரதிபசவராஜ் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.