தினகரன் 18.10.2010
பெண்ணாடத்தில் பாதை ஆக்கிரமிப்பு அகற்றம்
திட்டக்குடி,அக்.18: உயர்நீதிமன்ற உத்தரவுபடி பேரூராட்சி பாதை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. பெண்ணாடம் பேரூராட்சியில் பழைய பேருந்து நிலையம் அருகே நெடுஞ் சாலையையும், கோட்டை மதில் தெருவையும் இணைக்கும் பேரூராட்சிக்கு சொந்தமான பாதையும் உள்ளது. இந்த பாதையையொட்டி வடிகால் வாய்க்காலும் உள்ளன. இந்த பாதையை இப்பகுதி மக்கள் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இதே பகுதியில் வசிக்கும் கணபதி என்பவர் அந்த பாதை அவருக்கு சொந்தமானது என்ற உரிமை கொண்டாடி பேரூராட்சியில் எந்த அனுமதி யும் பெறாமல் பாதை யையும், வடிகாலையும் மறித்து ஆக்கிரமித்து கட்டி டம் கட்டி னார். இதை இப் பகுதி மக் கள் ஆட்சேபணை செய்து சாலை மறியல், ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பேரூராட்சி நிர்வாகம் இந்த ஆக்கிரமிப்பை அகற்றும்படி கணபதிக்கு நோட் டீஸ் அனுப்பியது. அந்த நோட்டீஸ் அடிப்படையில் குறிப்பிட்ட சுவற்றை இடிக்க கூடாது எனக்கோரி சென்னை உயர்நீதிமன்றத் தில் கணபதி வழக்கு தொடர்ந்தார். உயர்நீதிமன் றம் உரிய விசாரணை நடத்தி பேரூராட்சி அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டிடத்தையும், பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை இடிக்கும்படியும் இதற்கான செலவுத்தொகை ரூ 20ஆயிரம் கணபதியிடம் வசூலிக்கும் படியும் தீர்ப்பு அளித்தது. இதனையடுத்து கடலூர் பேரூராட்சி துணை இயக்குநர் சடையப்பன் தலைமை யில் ஆக்கிரமிப்பு பகுதிகளை பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் பொக்லைன் எந்திரம் கொண்டு ஆக்கிரமிப்பை அகற்றினர். ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் துணை தாசில்தார் மகாராணி, வருவாய் ஆய் வாளர் விருத்தகிரி, கிராம நிர்வாக அலுவலர் வெங்கடாசலம், உட்பட வருவாய் துறை, பேரூராட்சி அலுவலர்கள், போலீசார் கொண்ட குழுவினர் ஈடுபட்டனர்.
விருத்தாசலம் டி.எஸ்.பி. குப்புசாமி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ஸ்ரீதர், திருமால் ஆகியோர் உட்பட விருத்தாசலம் உட்கோட்ட சப்இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் சுமார் 30 பேர் அதிரடிப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.