தினமணி 31.08.2010
பெரம்பலூர் நகராட்சிக்கு குப்பை சேகரிக்கும் வண்டிகள்
பெரம்பலூர், ஆக. 30: பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில் | 4 லட்சம் மதிப்பில் குப்பைகள் சேகரிக்கும் வண்டிகள் பெறப்பட்டு,பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திங்கள்கிழமை முதல் விடப்பட்டன.
இதுகுறித்து நகர்மன்றத் தலைவர் எம்.என். ராஜா கூறியது:
பெரம்பலூர் நகராட்சிக்கு உள்பட்ட 21 வார்டுகளில் உள்ள நகர மக்களின் வீடுகளுக்குச் சென்று, மக்கும் குப்பை, மக்காத குப்பைகளைச் சேகரித்து, பெரம்பலூர் அருகேயுள்ள கவுள்பாளையம் கிராமத்தில் அமைக்கப்பட்டு வரும் மண்புழு உரம் தயாரிக்கும் கிடங்கில் சேகரிக்க உள்ளது.
அதனடிப்படையில், தற்போது | 8 ஆயிரம் மதிப்பிலான 50 குப்பை சேகரிக்கும் வண்டிகள் | 4 லட்சத்துக்கு பெறப்பட்டுள்ளது. இந்த வண்டிகள் மூலம் நகராட்சித் துப்புரவுப் பணியாளர்கள் பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்று, குப்பைகளைச் சேகரிக்க உள்ளனர்.
இந்த வண்டிகளில் உள்ள பச்சை பெட்டியில் மக்கும் குப்பைகளும், சிகப்புப் பெட்டியில் மக்காத குப்பைகளும் சேகரிக்கப்பட உள்ளது. எனவே, பொதுமக்கள் அனைவரும் நகரை தூய்மையாக வைத்துக்கொள்ள, இந்த வாகனங்களைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
இந்நிகழ்ச்சியின் போது, நகராட்சி ஆணையர் (பொ) கருணாகரன், நகராட்சித் துணைத் தலைவர் கி. முகுந்தன், நகர்மன்ற உறுப்பினர்கள் பாரி, ஜே.எஸ்.ஆர். கருணாநிதி, சிவக்குமார், துப்புரவு ஆய்வாளர் பன்னீர்செல்வம், பணி மேற்பார்வையாளர்கள் ராகவன், மோகன், கோபி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.