தினமலர் 30.07.2010
பெரம்பலூர் நகராட்சி கவுன்சில் கூட்டம்
பெரம்பலூர்: பெரம்பலூர் நகராட்சியின் சாதாரண கவுன்சில் கூட்டம் நகர்மன்ற கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு பெரம்பலூர் நகராட்சி தலைவர் ராஜா தலைமை வகித்தார். துணை தலைவர் முகுந்தன், ஆணையர் அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பெரம்பலூர் நகரில் எளம்பலூர் சாலையில் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பில் கான்கீரிட் தளம் விஸ்தரிப்பது, ஒருங்கிணைந்த குடியிருப்பு குடிசை மேம்பாட்டு திட்ட பயனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கவுன்சிலர்கள் பாரி, கனகராஜ், சரவணன், கருணாநிதி, ரகமத்துல்லா, ஜெயக்குமார், ரமேஷ்பாண்டியன், கண்ணகி, ஈஸ்வரி, புவனேஸ்வரி, பொற்கொடி, சுசிலா ஆகியோர் பங்கேற்றனர்.