மாலை மலர் 23.09.2009
பெரியார் பஸ் நிலையத்தில் தனியார் சார்பில் இலவச கழிப்பறை கட்டப்படும் இடம் மேயர் தேன்மொழி நேரில் ஆய்வு
மதுரை, செப். 23–
மதுரை மாநகராட்சிக்குட் பட்ட பகுதிகளில் மாநக ராட்சி மற்றும் தனியார் நிறுவனத்துடன் இணைந்து பெரியார் பஸ் நிலையத்தில் அமைக்கப்பட உள்ள இலவச கழிப்பறைக்கான இடத்தை மேயர் தேன்மொழி, கமிஷனர் செபாஸ்டின் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் மேயர் தேன் மொழி நிருபர்களிடம் கூறிய தாவது:-
மதுரை மாநகரை சுத்த மாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு வளர்ச்சிப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக நகரில் தேங்கும் குப்பைகளை சுத்தம் செய்து லாரிகள் மூலமாக வெள்ளைக்கல் குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரிக்கப்படுகிறது.
இதேபோல் நகரில் சேரும் கழிவு நீரினை பாதாள சாக்கடை மூலமாக அவனியாபுரம் மற்றும் வெள்ளைக்கல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங் களுக்கு கொண்டு சென்று கழிவுநீரை விவசாய மற்றும் இதர பாசனத்திற்கு பயன் படுத்தப்பட்டு வருகிறது. மேலும் மத்திய மந்திரி மு.க.அழகிரி அறிவுரையின் படி மதுரை மாநகரின் முக்கிய இடங்களான பஸ் நிலையம், ரெயில் நிலையம், மாரியம்மன் தெப்பக்குளம் மற்றும் மக்கள் அதிகம் கூடும் 22 இடங்களில் நவீன வசதிகளுடன் கூடிய கழிப்பறைகள், தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து கட்டு வதற்கு முடிவு செய்யப்பட்டு உள்ளது.
முதல் கட்டமாக பெரி யார் பஸ் நிலையத்தில் அழகேந்திரா ஆட்டோ மொபைல்ஸ் தனியார் நிறுவனத்துடன் இணைந்து நவீன வசதியுடன் கூடிய கழிப்பறை அமைக்கப்பட உள்ளது. அதையடுத்து பாரமவுண்ட் ஏர்வேஸ் நிறு வனத்துடன் இணைந்து 10 இடங்களில் கழிப்பறை அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது துணைமேயர் மன்னன், தலைமை பொறியாளர் சக்திவேல், நிர்வாக பொறி யாளர் மோகன்தாஸ், உதவி ஆணையாளர் தேவதாஸ், மக்கள் தொடர்பு அலுவலர் பாஸ்கரன் ஆகியோர் உடன் சென்றனர்.