தினகரன் 26.07.2010
பெருங்குடி வளாகத்தில் குப்பையில் மின்சாரம் இன்று திட்டம் தொடக்கம்
சென்னை, ஜூலை 26: பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில், தினசரி 1,500 டன் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்க, பீ69.50 கோடியில் பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மை திட்டம் தொடங்கப்படும். இந்த பணி ஓராண்டில் முடிக்கப்படும்” என்று மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். அதன்படி, பெருங்குடி வளாகத்தில் இந்தத் திட்டம் இன்று தொடங்குகிறது.
குப்பைகளில் இருந்து மின்சாரம் மற்றும் செங்கல், உரம் போன்ற பொருட்கள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், வீடு, வீடாக சென்று மக்கும், மக்காத என்று தரம் பிரிக்கப்பட்ட குப்பைகளை தூய்மை பணியாளர்கள் சேகரிக்க 500 மூன்று சக்கர சைக்கிள் வாங்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது.