தினமணி 15.02.2014
பெ.நா.பாளையத்தில் அம்மா திட்ட முகாம்
தினமணி 15.02.2014
பெ.நா.பாளையத்தில் அம்மா திட்ட முகாம்
கோவை வடக்கு வருவாய்த் துறை சார்பில் பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் வெள்ளிக்கிழமை அம்மா திட்ட முகாம் நடைபெற்றது.
அரங்கசாமி நாயுடு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இம்முகாமிற்கு
கோவை, வடக்கு வட்டாட்சியர் முருகன் தலைமை வகித்தார். பெ.நா.பாளையம்
பேரூராட்சி துணைத் தலைவர் சந்திரன், வார்டு கவுன்சிலர் சுப்பிரமணியம்
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமை பெ.நா.பாளையம் பேரூராட்சித் தலைவர் பி.ஆர்.ஜி.அருண்குமார்
துவங்கி வைத்தார். இதில், ஜாதி, இருப்பிடம், வருமானம் உள்ளிட்ட
சான்றிதழ்கள் கோரி விண்ணப்பங்களும், குடும்ப அட்டைகளில் பெயர் நீக்கம்,
சேர்த்தல், முகவரி மாற்றம் கோரிய விண்ணப்பங்களும் பெறப்பட்டன.
இதில் தகுதியுள்ள 254 பேருக்கு அப்போதே சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இதில், ஒன்றியத் தலைவர் வீரபாண்டி விஜயன், கூட்டுறவு சங்கத் தலைவர்கள்
கே.குருந்தாசலம், ரகுநாதன், மண்டல துணை வட்டாட்சியர் வாசுகி உள்ளிட்டோர்
பங்கேற்றனர்.