தினமணி 29.10.2013
பெ.நா.பாளையம் பேரூராட்சி பணியாளர்களுக்கு புத்தாடைகள்
தினமணி 29.10.2013
பெ.நா.பாளையம் பேரூராட்சி பணியாளர்களுக்கு புத்தாடைகள்
பெரிநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் பணியாற்றும்
துப்புரவுப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்துப் பணியாளர்களுக்கும் தீபாவளிப்
பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் புத்தாடைகள் வழங்கப்பட்டன.
திங்கள்கிழமை பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த இதற்கான நிகழ்ச்சிக்கு, செயல் அலுவலர் துவாரகநாத் சிங் முன்னிலை வகித்தார்.
துப்புரவுப் பணியாளர்கள், திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணியாளர்கள்,
குடிநீர் விநியோகிப்பாளர்கள் உள்ளிட்ட 70க்கும் மேற்பட்டவர்களுக்கு
பேரூராட்சித் தலைவர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தலா 2 செட் புத்தாடைகளை
வழங்கினார்.
இதில் துணைத் தலைவர் சந்திரன், சுகாதார மேற்பார்வையாளர் பரமசிவம்,
கவுன்சிலர்கள் மாரியப்பன், காளியண்ணன், கோவிந்தராஜ் உள்ளிட்ட பலர் கலந்து
கொண்டனர்.