தினமலர் 24.12.2009
பேனர்கள் அகற்றம்
உடுமலை : உடுமலையில், விதிமுறையை மீறி வைக்கப்பட்டிருந்த “ப்ளக்ஸ்‘ பேனர்கள் அகற்றப்பட்டன.உடுமலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள பஸ் ஸ்டாண்ட், பழைய பஸ் ஸ்டாண்ட், தளி ரோடு ஆகிய இடங்களில் அரசியல் கட்சிகள் மற்றும் இதர அமைப்புகள் சார்பில் “ப்ளக்ஸ்‘ போர்டுகள் வைக்கப்படுகின்றன.ரோட்டின் வளைவு பகுதியை பேனர்கள் மறைத்துக் கொள்வதால், வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்களில் மோதி விபத்துக்கு உள்ளாகின்றனர். இதுகுறித்து “தினமலர்‘ நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, அனுமதியில்லாமல் வைக்கப்பட்டிருந்த பேனர்களை நகராட்சி அதிகாரிகள் நேற்று அகற்றினர்.