தினமணி 07.04.2010
பேனர் வைப்போரை கண்காணிக்க பறக்கும் படை
புதுச்சேரி, ஏப். 6: புதுச்சேரியில் பேனர், கட்-அவுட் வைத்திருப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து கண்காணிக்க பறக்கும்படை அமைக்கப்படுகிறது என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் கூறினார்.
÷இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:
÷புதுச்சேரியில் பேனர், கட்-அவுட் வைப்பது தொடர்பாக சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டு வருவதாக எம்எல்ஏக்கள் பலரும் சட்டப் பேரவையில் கூறினார்கள். ஏற்கெனவே இதற்குத் தடை உத்தரவு இருக்கிறது. இருப்பினும் பேனர் உள்ளிட்டவை வைக்கப்பட்டுள்ளன. இனிமேல் இந்த உத்தரவு கடுமையாக அமல் செய்யப்படும்.
÷இப்போது வைக்கப்பட்டுள்ள கட்-அவுட், பேனர்களை இம் மாதம் 8-ம் தேதி 6 மணிக்குள் அகற்ற வேண்டும். இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதிகாரிகளுடன் என்னுடைய முன்னிலையில் அகற்றப்படும். மேலும் குறிப்பிட்ட நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும். தொடர்ந்து கண்காணிக்க உள்ளாட்சித் துறை, வருவாய்த் துறை, காவல் துறையினர் அடங்கிய பறக்கும் படை அமைக்கப்படும் என்றார் அமைச்சர் நமச்சிவாயம்