பேரூராட்சிகளில் வளர்ச்சி பணி: எம்.பி. ராசா ஆய்வு
பெ.நா.பாளையம், : கூடலூர் கவுண்டம்பாளையம் மற்றும் நெ.4 வீரபாண்டி பேரூராட்சி வளர்ச்சி பணிக்காக நீலகிரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் நிதியிலிருந்து ரூ. 27 லட்சம் ஒதுக்கப்பட்டது.
அதை தொடர்ந்து கூடலூர் பேரூராட்சி ராவுத்தூர் கொல்லனூரில் ரூ. 14 லட்சம் மதிப்பில், தரை பாலம் அமைக்கப்படுகிறது. வீராபாண்டி பேரூராட்சி பகுதியில் வடிகால் ரூ. 14 லட்சம் மதிப்பில் அமைக்கப்படுகிறது. அப்பணிகள் குறித்து நீலகிரி பாராளுமன்ற தொகுதி எம்பி ராசா நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
முன்னதாக நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூர் கழகம் சார்பில் எம்பி ராசாவுக்கு, நகர செயலாளர் பத்மாலயாசீனிவாசன் தலைமையில், மாவட்ட பொருளாளர் நாச்சிமுத்து, ஒன்றிய செயலாளர் சுப்ரமணியன், பேரூராட்சி தலைவர் அறிவரசு, முன்னாள் துணைத்தலைவர்கள் வீரபத்திரன், ராஜேந்திரன், நகர செயலாளர் ஸ்ரீனிவாசன், கணேசமூர்த்தி, ரங்கநாதன் மாவட்ட தொண்டரணி அமைப்பா ளர் தனக்குமார், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சாந்தாராம், கவுன்சிலர்கள் பழனிச்சாமி, முத்துலட்சுமி, மீனா, முருகானந்தம் உள்ளிட்ட பலர் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.