தினமலர் 04.01.2014
பேரூராட்சிக்கு புதிய கட்டடம்
தாடிக்கொம்பு:தாடிக்கொம்பு குடகனாறு பாலம் அருகே அகரம் பேரூட்சி அலுவலகம் உள்ளது. இவ்வலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்டும் பணி நடந்து வருகிறது.
தற்போதுள்ள அலுவலகத்தில் இடம் பற்றாக்குறையாக உள்ளது. எனவே இந்த அலுவலகம் அருகிலேயே இரண்டு தளங்களுடன் நவீன வசதிகள் கொண்ட புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. நாற்பது லட்சம் ரூபாய் மதிப்பீட்டில அடிப்படை கட்டமைப்பு வசதிக்கான நிதி பற்றாக்குறையை ஈடு செய்வதற்கான நிதி பங்களிப்புத் திட்டம் 2011-2012 ன் கீழ் இந்த கட்டடம் கட்டப்படுகிறது. “”ஓரிரு மாதங்களில் பணி முடிந்து புதிய அலுவலகம் பயன்பாட்டிற்கு வரும்,”” என, பேரூராட்சி செயல் அலுவலர் செல்வராஜ் தெரிவித்தார்.