தினமணி 02.09.2013
தினமணி 02.09.2013
பேரூராட்சி அலுவலகத்துக்கு புதிய கட்டடம்
கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அலுவலகத்திற்கு ரூ.45 லட்சம் செலவில் புதிய கட்டடம் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அலுவலகமானது கடந்த 1990-ம் ஆண்டு திறக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த அலுவலகத்தில் பல்வேறு வசதிக் குறைபாடுகள் உள்ளது
என்றும், பேரூராட்சிக்கென புதிய கட்டடத்தை அமைக்க வேண்டும் எனவும் பல்வேறு
அமைப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அலுவலகத்திற்கு புதிய கட்டடம் அமைக்க தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்தது.
இதனைத்தொடர்ந்து, பேரூராட்சித் தலைவர் முத்துகுமரன் தலைமையில் புதிய கட்டடத்துக்கான பூமி பூஜை அண்மையில் நடைபெற்றது.
இந்நிலையில் ரூ.45 லட்சம் செலவில் புதிய கட்டடம் கட்டும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.