தினமணி 14.09.2010
பேரூராட்சி அலுவலக புதிய கட்டடம் திறப்பு
கும்பகோணம், செப். 13: கும்பகோணம் அருகேயுள்ள தாராசுரம் பேரூராட்சி அலுவலக புதிய கட்டடத்தை தமிழக நிதியமைச்சர் க. அன்பழகன் திங்கள்கிழமை திறந்துவைத்தார்.
அனைத்துப் பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் | 12.95 லட்சத்தில் கட்டப்பட்ட பேரூராட்சி அலுவலக புதிய கட்டடம், | 10 லட்சத்தில் கட்டப்பட்ட சமுதாயகக் கூடம் ஆகியவற்றையும், அவற்றுக்கான கல்வெட்டையும் அமைச்சர் அன்பழகன் திறந்துவைத்தார்.
இந்த விழாவுக்கு மத்திய நிதித் துறை இணையமைச்சர் எஸ்.எஸ். பழநிமாணிக்கம் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் எம்.எஸ். சண்முகம், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள் கல்யாணசுநதரம், அன்பழகன், தாராசுரம் பேரூராட்சித் தலைவர் சரஸ்வதிஅம்மாள், முன்னாள் தலைவர் அசோக்குமார், வருவாய்க் கோட்டாட்சியர் அசோக்குமார், ஒன்றியக் குழுத் தலைவர் செல்வராஜன், செயல் அலுவலர் மோகன்தாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.