தினமலர் 30.07.2012
பேரூராட்சி ஊழியர் சங்க பொதுக்குழு கூட்டம்
தர்மபுரி: தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர் சங்கத்தின் தர்மபுரி மாவட்ட பொதுக்குழு கூட்டம் தர்மபுரியில் நடந்தது.சதீஸ் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் தமிழ்செல்வி, மாவட்ட துணை தலைவர் சுந்தர்ராஜன், பேரூராட்சி ஊழியர் சங்க விழுப்புரம் மாவட்ட தலைவர் தங்கவேல் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினார்கள்.இதையடுத்து, தர்மபுரி மாவட்ட பேரூராட்சி ஊழியர் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. இதில், மாவட்ட தலைவராக சதீஸ், செயலாளராக முருகேசன், பொருளாளராக ராஜ்குமார் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மேலும், மாநில செயற்குழு உறுப்பினராக ஸ்ரீதர் மற்றும் மூன்று துணை தலைவர்கள், மூன்று இணை செயலாளர்கள், 10 மாவட்ட செயற்குழு உறுப்பினர்களுக்கும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
“மாநில மற்றும் மாவட்ட அளவில் முடங்கியுள்ள பதவி உயர்வு பணி மூப்பை பட்டியலை விரைந்து முடிக்க வேண்டும். விடுமுறை நாட்களில் இரவு நேரங்களில் ஊழியர்களை அலுவலகங்களில் பணி செய்ய நிர்பந்திக்கும் கலாச்சாரத்தை கைவிட வேண்டும். ஒரே பணியில், 10 ஆண்டுகளுக்கு மேல் பணி செய்தால் அதை தகுதியாக கொண்டு பதவி உயர்வு மற்றும் அதற்கான ஊதியம் வழங்க வேண்டும்’ என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.