தினமலர் 16.08.2010
பேரூராட்சி பணியாளர்கள் உண்ணாவிரதம் நடத்த போவதாக அறிவிப்பு
மடத்துக்குளம்: “டாஸ்மாக்‘ மதுக்கடை ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற பேரூராட்சி பணியாளர்கள் மிரட்டப்பட்டதையடுத்து பேரூராட்சித்தலைவர் தலைமையில் கவுன்சிலர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளனர்.
மடத்துக்குளம் பஸ்ஸ்டாண்டு வளாகத்தில் உள்ள ஆக்கிரமிப்பு குறித்து “தினமலரில்‘ செய்தி வெளியானதையடுத்து இங்குள்ள கடைகளின் ஆக்கிரமிப்புகள் அகற்ற செயல் அலுவலர் உத்தரவிட்டார். பழக் கடை, பொம்மை கடை, வளையல் கடை ஆக்கிரமிப்புகள் அகற் றப்பட்டன. ஆனால் அனுமதி இல்லாமல் நடந்து வரும் இறைச்சி கடைகள், அரசு விதிக்கு புறம்பாக நடக்கும் “டாஸ்மாக்‘ மதுக்கடைக்கு முன் உள்ள ஆக்கிரமிப்புகள் அப்புறப்படுத்தப்படவில்லை.
இது குறித்த தகவல் கிடைத்த பேரூராட்சி நிர்வாகத்தினர் துப்புரவுப்பணியாளர்களை அனுப்பி ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டனர். “டாஸ்மாக்‘ மதுக்கடைக்கு துப்புரவுப்பணியாளர்கள் சென்றதும், அங்கிருந்த அ.தி.மு.க., உள்ளாட்சி பிரதிநிதி கடையில் உள்ள எந்த பொருளையும் தொடக்கூடாது. முன் பகுதியில் உள்ள மறைப்பு தட்டிகளை கூட அப்புறப்படுத்த கூடாது. அதையும்மீறி அப்புறப்படுத்த முயற்சி செய்தால் விளைவுகள் கடுமையாக இருக்கும் என எச்சரிக்கை செய்ய துப்புரவுப்பணியாளர்
கள் வேறு வழியின்றி திரும்பினர். மடத்துக்குளம் பஸ்ஸ்டாண்டில் உள்ள “டாஸ்மாக்‘ மதுக்கடை இடமாற்றம் குறித்து பொது அனைவரும் எதிர்பார்க்கும் நிலையில் சில கட்சி பிரமுகர்கள் மதுக்கடைக்கு ஆதரவாக நடப்பது குறித்து மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்மடத்துக்குளம் பேரூராட்சி கவுன் சிலர்கள் ஆனந்தன் (அ.தி.மு.க.,) பாலு (இ.காங்.,) டாஸ்மாக் மதுக்கடையை இடமாற்றம் செய்யாவிட்டால் பேரூராட்சித்தலைவர் தலைமையில் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக கூறியுள்ளனர். செயல்அலுவலர் திருமலைசாமி கூறுகையில், “”மாவட்ட கலெக்டரின் அனுமதியுடன் தொடங்கப்பட்ட இக்கடையை, உடனடியாக இடமாற்றம் செய்ய முடியாது. பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் வைத்து திருப்பூர் கலெக்டருக்கு அனுப்பியுள்ளளோம். அவர்தான் முடிவு செய்ய வேண்டும்” என்றார். பேரூராட்சி தலைவர் குப்புசாமி கூறும் போது, “”சட்டப்படி கடமையை செய்ய சென்ற துப்புரவு பணியாளர்கள் மிரட்டியது குறித்து விசாரிக்கப்படும், விரைவில் “டாஸ்மாக்‘ மதுக்கடை காலி செய்ய சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது,” என் றார்.