தினகரன் 04.08.2010
பேரூராட்சி மன்ற கூட்டம்
திட்டக்குடி, ஆக. 4: பெண்ணாடம் பேரூராட்சி மன்ற கூட்டம் தலைவர் அமுதலட்சுமி ஆற்றலரசு தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் காதர், நிர்வாக அதிகாரி குப்புசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அனைத்து வார்டு உறுப்பினர்களும் இதில் கலந்து கொண்டனர். பழைய பஸ் நிலையத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள வணிக வளாகத்துக்கு அம்பேத்கார் பெயர் சூட்டுவது என சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி உதவியில் 35 லட்ச ரூபாய் தார் சாலை கள், சிமெண்ட் சாலைகள் அமைத்தல் திருமலை அகரம் கிழக்குபகுதியில் அங்கன்வாடி மையம் கட்டுவது உட்பட்ட வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்வது பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் 5லட்ச ரூபாயில் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ள உட் பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.