தினமணி 08.10.2013
பேரையூர் பகுதியில் டெங்கு முன் தடுப்பு நடவடிக்கை
பேரையூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளிலும், டெங்கு தடுப்பு முகாம் நடைபெற்றது.
பேரூராட்சிகளின்
இயக்குநர் செல்வராஜ், மாவட்ட ஆட்சியர் எல். சுப்பிரமணியன் ஆகியோர்
உத்தரவின்பேரில், மண்டல உதவி இயக்குநர் ராஜேந்திரன் ஆலோசனையின்பேரில்,
டெங்கு முன் தடுப்பு நடவடிக்கை முகாம் நடைபெற்றது. இதையொட்டி,
பேரூராட்சியிலுள்ள 15 வார்டுகளிலும் நடைபெற்ற ஒட்டுமொத்த துப்புரவுப்
பணியின்போது, நீர்த் தேக்கத் தொட்டிகளில் அபேட் மருந்து தெளிக்கப்பட்டது.
குப்பைகள் அகற்றப்பட்டன. சாலையோரங்களில் குளோரின் பவுடர் தூவப்பட்டது.
பேரையூர் பேரூராட்சித் தலைவர் கே. குருசாமி, செயல் தலைவர் கலைசெல்வி ஆகியோர் முன்னிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.