பொது இடங்களில் இறைச்சி கழிவு கொட்டினால் நடவடிக்கை
கோவை: பொது இடங்களில் இறைச்சி கழிவு கொட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி நிர்வா கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோவை மாநகராட்சி கமிஷனர் லதா வெளியிட்டுள்ள அறிக்கை:கோவை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள 100 வார்டுகளில், மாநகராட்சி அனுமதி பெறாமல் கோழி இறைச்சி மற்றும் மாட்டிறைச்சி கடைகள் இயங்கிவருகின்றன. இவைகளில் இருந்து இறைச்சி கழிவுகள் பொதுஇடங்களில் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால், துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது.
அனுமதி இல்லாமல் மற்றும் மாநகராட்சி உரிமம் பெறாமல் செயல்படும் இறைச்சி கடைகள் மீது மாநகராட்சி அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டு, இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்படும். இந்த உத்தரவை மீறி செயல்படும் இறைச்சி கடை உரிமையாளர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.