தினமணி 10.08.2009
பொது இடங்களில் புகைப்பிடிக்கக் கூடாது: மாநகராட்சி ஆணையர்
திருச்சி, ஆக. 8: பொது இடங்களில் சிகரெட் பிடிப்பதைத் தடுக்கும் பணியைத் தீவிரப்படுத்துங்கள் என்று மாநகராட்சி ஆணையர் த.தி. பால்சாமி அறிவுறுத்தினார்.
திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசிய அவர் இதைத் தெரிவித்தார். அவர் மேலும் பேசும்போது, “சுகாதாரக் கேட்டை ஏற்படுத்தும் இச்செயலைக் கட்டுப்படுத்த அனைத்துக் கோட்டங்களிலும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
கூட்டத்துக்கு மாநகர சுகாதார அலுவலர் டாக்டர் கே.சி. சேரன் முன்னிலை வகித்தார். நகரப் பொறியாளர் எஸ். ராஜா முகம்மது, செயற்பொறியாளர் ஆர். சந்திரன் மற்றும் உதவி ஆணையர்கள், உதவிச் செயற்பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.