தினமலர் 05.05.2010
பொது இடங்களில் புகை பிடிக்க தடை : விளம்பரப்படுத்த காஞ்சி நகராட்சி முடிவு
காஞ்சிபுரம் : பொது இடங்களில் புகை பிடிப்பதை தடை செய்யும் சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த காஞ்சிபுரம் நகராட்சி முடிவு செய்துள்ளது.மத்திய அரசு, பொது இடங்களில் புகை பிடிக்க தடை விதித்துள்ளது. பொது அலுவலகங் கள், மருத்துவமனை கட்டடங்கள், நல நிறுவன கட்டடங்கள், கேளிக்கை இடங்கள், உணவு விடுதிகள், சிற்றுண்டி விடுதிகள், பொது அலுவலகம், நிதித்துறை கட்டடம், கல்வி கட்டடங்கள், நூலகங்கள், பொது கழிப்பிடங்கள், விளையாட்டு மைதானங்கள், ரயில் நிலையம், பஸ் நிலையம், தொழிற்கூடங்கள், கடைகள், சினிமா அரங்கம், ஆடலரங்கம், மதுக்கடைகள், விமான நிலையம், மக்கள் அமருமிடம் ஆகியவை பொது இடங்களாகும்.
பொது இடங்களில் புகை பிடிப்பவரிடம் 200 ரூபாய் வரை தண்டனை வரி வாங்கப்படும். கட் டட நிறுவன உரிமையாளரான மேல் அதிகாரிகள், கண்காணிப்பாளர் ஆகியோர், பொது இடங் களில் யாரும் புகைப்பதில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். எங்கும் சிகரெட் சாம்பல் கொட்ட தட்டு, தீப்பெட்டி வைக்கக் கூடாது. விதிமுறைகளை பின்பற்றாதவர்களை தண்டிக்க வேண்டும்.
கல்வி நிலையங்களைச் சுற்றி 100 அடி தூரத்திற்கு புகையிலை சம்பந்தப்பட்ட பொருட் கள் விற்பனை செய்யக்கூடாது. 18 வயதிற் குட்பட்டவர்களுக்கு புகையிலை சம்பந்தப்பட்ட பொருட்களை விற்பனை செய்யக்கூடாது.இவ்விவரங்களை நோட்டீசாக அச்சிட்டு வினியோகம் செய்வது, விளம்பர பேனர்கள் வைப்பது என நகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக 10 ஆயிரம் ரூபாய் ஒதுக்க நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இத்தீர்மானத்தின் போது பேசிய பா.ம.க., கவுன்சிலர் உமாபதி, ‘புகை பிடிப்பதை தடுக்கவும், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஒரு லட்சம் ரூபாய் வரை நிதி ஒதுக்கலாம்‘ என்றார்.