தினமலர் 03.11.2010
பொன்விழா நகரில் நிலத்தடி நீர் வற்றியது மாநகராட்சி குடிநீர் வழங்க மேயரிடம் மனுதிருநெல்வேலி:பொன்விழா நகரில் நிலத்தடி நீர் வற்றிவிட்டதால் மாநகராட்சி மூலம் குடிநீர் வழங்கி தண்ணீர் பிரச்னையை தீர்க்கவேண்டும் என குடியிருப்போர் நலச்சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.இதுகுறித்து பொன்விழா நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் மேயரிடம் அளித்துள்ள மனுவில், “எங்கள் நகரில் 175 வீடுகள் உள்ளன. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் 98ம் ஆண்டு வீடுகள் விலைக்கு வாங்கப்பட்டன. நிலத்தடி நீர் 5 போர்வெல் ஆழ்குழாய் கிணறுகள் மோட்டார் பொருத்தி சம்ப் மூலமாக நிலத்தடி நீர் கடந்த 12 ஆண்டுகளாக பெற்று வந்தோம். மழையில்லாத காரணத்தால் 5 மோட்டார்களும், நிலத்தடி நீரும் வறண்டுவிட்டது. நல அமைப்பு சார்பாகவும், லாரி மூலமாகவும் தண்ணீர் வழங்கினோம். ஆனால் தற்போது தண்ணீர் வழங்க முடியவில்லை. எங்கள் பகுதியில் அனைத்து வீடுகளிலும் தண்ணீர் இல்லை. எனவே மாநகராட்சி மூலம் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் தந்தால் தண்ணீர் பஞ்சத்தை சமாளிக்கலாம். எங்களுக்கு தண்ணீர் வழங்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவேண்டும்.இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.