பொருட்காட்சியில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்
திருச்சி, : திருச்சியில் நடைபெற்று வரும் அரசு பொருட்காட்சியில் மாநகராட்சி அரங்கில் பிறப்பு, இறப்பு சான்றுகளைப் பெற்றுக்கொள்ளலாம் என மாநகராட்சி கமிஷனர் தண்டபாணி தெரிவித்துள்ளார்.
இது குறித்த அவரது செய்திக்குறிப்பு:
திருச்சி வெஸ்ட்ரி மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் அரசு பொருட்காட்சி கடந்த 11ம் தேதி தொடங்கி 45 நாட்கள் நடைபெறுகின்றது. இதில் அரசுத்துறை, தனியார் உள்ளிட்ட பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டுள் ளன. மேலும் மக்கள் பொழுதுபோக்குவதற்கு ஏற்ற வகையில் பல்வேறு பொழுது போக்கு அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.
இதில் திருச்சி மாநகராட்சி சார்பிலும் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இதில் மாநகராட்சி பகுதிக் குள் கடந்த 1997ம் ஆண் டுக்கு பின்னர் பதிவு செய்யப்பட்ட பிறப்பு மற்றும் இறப்பு சான்றுகளை கட்டணமின்றி இலவசமாக பெற்றுக்கொள்ள வழி வகை செய்யப்பட்டுள்ளது. தவிர பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பிளாஸ்டிக் சேகரித்து கொடுப்போருக்கு பரிசு கூப்பன் கள் வழங்கப்பட்டு அதிர் ஷ்ட குலுக்கல் மூலம் பரிசுகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
மாநகராட்சி அரங்குக்கு வரும் பார்வையாளர்களுக்கு, சுகாதாரத் துறை சார்பில் ரத்த அழுத் தம், மற்றும் சர்க்கரை அளவு ஆகியன ரத்தபரிசோதனை மூலம் சோதித் துக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ் வாறு அவர் தெரிவித்துள்ளார்.