தினமலர் 22.07.2010
பொள்ளாச்சி நகராட்சியில் சத்துணவு பணி வாய்ப்பு
பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகராட்சியில் 12 இடங்களுக்கான சத்துணவு உதவியாளர் பணியிடத்திற்கும், 2 இடங்களுக்கான சத்துணவு அமைப்பாளர் பணியிடத்திற்கும் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
பொள்ளாச்சி நகராட்சி கமிஷனர் வரதராஜ் அறிக்கை: பொள்ளாச்சி நகராட்சியில் குப்பாண்டர் துவக்கப்பள்ளி, நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பல்லடம் ரோடு துவக்கப்பள்ளி, ராமகிருஷ்ணாநகர் நடுநிலைப்பள்ளி, வடுகபாளையம் நடுநிலைப்பள்ளி, டி.இ.எல்.சி., பள்ளி, கோவை ரோடு துவக்கப்பள்ளி, பாலகோபாலபுரம் வீதி நடுநிலைப்பள்ளி, ஏ.பி.டி., ரோடு நடுநிலைப்பள்ளி, மரப்பேட்டை நடுநிலைப்பள்ளி, மாரியம்மாள் மேல்நிலைப்பள்ளி, கோட்டூர் ரோடு நடுநிலைப்பள்ளிகளில் சத்துணவு உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளன.
அதேபோன்று சிக்கஞ்செட்டியார் துவக்கப் பள்ளி, பல்லடம் ரோடு துவக்கப்பள்ளிகளில் சத்துணவு அமைப்பாளர் பணியிடம் காலியாக உள்ளது. காலியாக உள்ள பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரும் 30ம் தேதி வரையிலும் நகராட்சி அலுவலகத்தில் ஒப்படைக்கலாம்.
நிரந்தர தீர்வு : குளங்களின் பராமரிப்பு பொறுப்பை மாநகராட்சியிடம் பொதுப்பணித்துறை ஒப்படைத்து விட்டாலும், பொறுப்பாக ஒரு நல்ல பணியையும் செய்துள்ளது. பெரியகுளத்திலிருந்து வாலாங்குளத்துக்கு தண்ணீர் செல்வதில் இருந்த சிக்கலுக்கு நிரந்தர தீர்வாக, இரு குளங்களுக்கும் இடையே பெரிய குழாய் பதித்து முடித்துள்ளது. இதனால், எதிர்காலத்தில் சாக்கடை அடைப்பு, மண் கழிவுகள் போன்றவற்றால் வாலாங்குளத்துக்கு தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்படாது. இந்த நிதியை பெற்றுத் தந்த மாவட்ட நிர்வாகமும், பணியை விரைவாகச் செய்து முடித்த பொதுப்பணித்துறையும் பாராட்டுக்குரியவை. இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.