தினமலர் 15.10.2010
போடியில் குடிநீர் குழாய் இணைப்பு பெற கெடு
போடி
: போடி நகராட்சியில் சிறப்பு சாலை திட்டத்தின் கீழ் 1.60 கோடி ரூபாய் மதிப்பில் சிமென்ட், தார்சாலை பணிகள் துவங்கப்பட உள்ளதால் குறிப்பிட்ட தெருக்களை சேர்ந்தவர்கள் 15 நாட்களுக்குள் புதிய குழாய் இணைப்பு பெற வேண்டும். ஷிப்டிங் பணிகளை முடித்துக் கொள்ள வேண்டும்.போடி நகராட்சி பகுதிக்கு உட்பட்ட
15 வார்டுகளில் சிறப்பு சாலை திட்டத்தின் கீழ் ரூபாய் ஒரு கோடியே 60 லட்சம் மதிப்பில் சுப்பிரமணியர்கோயில் அக்ரஹாரம், பெரியாண்டவர்புரம் நடுத்தெரு, பழைய ஆஸ்பத்திரி தெரு, சேதுபாஸ்கரன் தெரு, வ.உ.சி., நகர், கே.எம்.எஸ்., லே–அவுட், மதுரைவீரன் வடக்கு தெரு உட்பட பல பகுதிகளில் சிமென்ட் ரோடும், தெற்கு ராஜவீதி, கீழராஜவீதி, பரமசிவன் கோயில் தெரு, போயன்துறை ரோடு, சுந்தரபாண்டியன் தெரு, ரெங்கசாமி தெரு, பக்தசேவா தெரு, பிள்ளையார் கோயில் தெரு, மாணிக்கவாசகர் தெரு, வீரபத்திரன் தெரு, தேவர்சிலை – குண்டாலீஸ்வரி கோயில் வரை தார் ரோடும் அமைக்கும் பணி விரைவில் துவங்கப்பட உள்ளது.இதனால் இப்பகுதிகளில் குடியிருப்பவர்கள் புதிய குழாய் இணைப்பு பெறவும்
, இருக்கும் குழாய்களை ஷிப்டிங் செய்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் 15 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு குறிப்பிட்ட பகுதிகளில் புதிய குழாய் இணைப்பு பெற முடியாது. குழாய் ஷிப்டிங் செய்து கொள்ள இயலாது என நகராட்சி கமிஷனர் சரவணக்குமார் தெரிவித்துள்ளார்.