தினமணி 04.07.2013
போடியில் துப்புரவுப் பணிகள் தனியார்மயம்
போடியில் துப்புரவுப் பணிகள் தனியார் நிறுவனம் மூலம் செயல்படுத்தும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
போடி
நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இவற்றில், தற்போது நகராட்சி துப்புரவுப்
பணியாளர்கள் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போதுள்ள மக்கள்
தொகை வளர்ச்சிக்கேற்பவும், நகரின் வளர்ச்சிக்கேற்பவும் போதிய துப்புரவுப்
பணியாளர்கள் இல்லை. இதனால், பல வார்டுகளில் துப்புரவுப் பணிகள் நடைபெறாமல்
தேங்கியுள்ளன. எனவே, போடி பகுதியில் டெங்கு உள்ளிட்ட மர்மக் காய்ச்சல்
வேகமாக பரவும் சூழல் உள்ளது. இது குறித்து, நகர்மன்ற உறுப்பினர்களும்
தொடர்ந்து நகர்மன்றக் கூட்டங்களில் புகார் தெரிவித்து வந்தனர்.
இருப்பினும், தற்போதுள்ள நகராட்சி வருவாயின் அடிப்படையில் கூடுதலாக
துப்புரவுப் பணியாளர்களை நியமிக்க முடியாத நிலை இருந்து வந்தது.