தி இந்து 23.03.2017
போர்க்கால அடிப்படையில் வறட்சி நிவாரணப் பணிகள்:
குடிநீர் பற்றாக்குறையை அரசு திறமையாக கையாள்கிறது- உள்ளாட்சித் துறை
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விளக்கம்

அமைச்சர் வேலுமணி | கோப்புப் படம்.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கடுமை யான குடிநீர் பற்றாக்குறையைப் போக்க
போர்க்கால அடிப்படை யில் நடவடிக்கைகளை எடுத்து அரசு திறமையாக கையாண்டு
வருவதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையில் ரூ.100 கோடி யில் வறட்சி நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வும் அவர் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் திமுக உறுப்பினர்
கு.பிச்சாண்டி (கீழ்பெண்ணாத்தூர்) கொண்டு வந்த சிறப்பு கவன ஈர்ப்பு
தீர்மானத்துக்கு பதிலளித்து அமைச்சர் பேசியதாவது:
தமிழகத்தில் பருவமழை 62 சதவீதம் குறைவாக பெய்ததால் 140 ஆண்டுகளில் இல்லாத
வறட்சி இந்த ஆண்டு ஏற்பட்டுள்ளது. குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க
முதல்வர் தலைமையிலும், எனது தலைமையிலும் பல்வேறு ஆய் வுக் கூட்டங்கள்
நடத்தப்பட்டு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
நகரங்கள், ஊரகப் பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க ரூ.976 கோடியே
76 லட்சத்தில் புதிய ஆழ்துளை கிணறுகள் அமைத்தல், பழைய ஆழ்துளை கிணறுகளை
புனரமைத்தல், சிறு மின்விசை, கைப்பம்புகள் அமைத்தல், லாரிகள் மூலம்
குடிநீர் வழங்குதல், பிளாஸ்டிக் தொட்டிகள் நிறுவுதல், பழுதடைந்த
மோட்டார்களை மாற்றியமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் போர்க்கால
அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நீர் இருப்பு மோசம்
சென்னை மாநகராட்சிப் பகுதி களில் நாள்தோறும் 830 மில்லியன் லிட்டர்
குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. பருவமழை பொய்த்தது, கிருஷ்ணா நதிநீர் வரத்து
குறைவு ஆகியவற்றால் நீராதாரங்களில் இருப்பு மிகவும் மோசமான நிலையில்
உள்ளது.
ஏரிகள், கிருஷ்ணா நதிநீர், கடல் நீரை குடிநீராக்கும் திட்டங்கள், வீரா ணம்
திட்டம், புதிதாக இணைக் கப்பட்ட பகுதிகளில் நிலத்தடி நீராதாரங்கள், பூண்டி,
தாமரைப் பாக்கம் கிணற்றுத்தளங்கள் மூல மாக நாளொன்றுக்கு சராசரியாக 550
மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. வரும் மே மாதத்தில்
சென்னையைச் சுற்றியுள்ள ஏரிகளில் நீர் வற்றிப் போகும் சூழ்நிலையை எதிர்
பார்த்து ரூ.100 கோடியில் வறட்சி நிவாரணப் பணிகள் போர்க்கால அடிப்படையில்
மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.
சென்னை தவிர மற்ற பகுதி களில் 553 குடிநீர்த் திட்டங்கள் மூலம் 4 கோடியே 21
லட்சம் பேர் பயன்பெறும் வகையில் நாள்தோறும் 1,565 மில்லியன் லிட்டர்
குடிநீர் வழங்கப்பட்டு வரு கிறது. மேலும், தமிழ்நாடு குடிநீர் வடிகால்
வாரியம் மூலம் ரூ.98 கோடியே 57 லட்சத்தில் புதிய ஆழ் துளை கிணறுகள், புதிய
நீர்உறிஞ்சு கிணறுகள் அமைத்தல் உள்ளிட்ட 1,898 நீராதார புனரமைப்புப் பணிகள்
மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன. 10 மாநகராட்சிகள், 68 நகராட்சிகளில் 189
நகராட்சி லாரிகள், 167 தனியார் வாடகை லாரி கள் மூலம் தினமும் 15 மில்லியன்
லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
மாநகராட்சிகள், நகராட்சிகளில் ரூ.65 கோடியே 35 லட்சத்தில் 1,337 புதிய
ஆழ்துளை கிணறுகள் உள்ளிட்ட வறட்சி நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள் ளன.
பேரூராட்சிப் பகுதிகளில் ரூ.46.41 கோடி, ஊரகப் பகுதி களில் ரூ.703.43
கோடியில் குடிநீர் பணிகள் நடைபெற்று வருகின்றன.
குடிநீர் திட்டப் பணிகளுக்கு முன்னுரிமை அளித்து 14-வது நிதிக்குழு
செயலாக்க மானியம் ரூ.818.25 கோடி, ஊராட்சிகளுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரியில் ரூ.114.58 கோடி, மார்ச்சில் ரூ.131.26 கோடி நிதிக் குழு
மானியமாக விடுவிக்கப் பட்டுள்ளது. இத்தொகையை குடிநீர் பணிகளுக்காக மட்டுமே
பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.15 கோடி, தாய்த் திட்டம் 2-ன்
கீழ் ரூ.300 கோடியில் குடிநீர் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கிராம
ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய பொது நிதி, எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதிகளை
முன்னுரிமை அடிப்படையில் குடிநீ்ர் பணிகளுக்கு பயன்படுத்த
அறிவுறுத்தப்பட்டுள்ளது. 140 ஆண்டுகளில் இல்லாத வறட்சியால் ஏற்பட்டுள்ள
குடிநீர் பற்றாக்குறையை தமிழக அரசு திறமையாக கையாண்டு வருகிறது.
குடிமராமத்து திட்டத்துக்காக ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இன்று (மார்ச் 22) உலக தண்ணீர் நாள். இந்நாளில் தண்ணீரை சிக்கனமாக பயன்
படுத்த வேண்டியது குறித்த விழிப்புணர்வை மக்களிடம் எம்எல்ஏக்கள் ஏற்படுத்த
வேண் டும்.
இவ்வாறு எஸ்.பி.வேலுமணி கூறினார்.