தினமலர் 09.02.2010
போலியோ சொட்டு மருந்து முகாம்
செய்யாறு: செய்யாறு நகராட்சி மற்றும் ஒன்றிய பகுதிகளில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடந்தது. நகராட்சி: செய்யாறு நகராட்சியில் நடந்த முகாமை சேர்மன் சம்பத் தொடங்கி வைத்தார். மருத்துவ அதிகாரி பிரதாப், துப்புரவு அலுவலர் பாஸ்கர், துப்புரவு ஆய்வாளர் மதனராஜன் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர். 3 மொபைல் “பூத்‘ உள்ளிட்ட 17 மையங்களில் ஆயிரத்து 509 பெண் குழந்தைகள் உள் ளிட்ட 3 ஆயிரத்து 290 குழந் தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
அரசு மருத்துவமனை: செய்யாறு அரசு மருத்துவமனையில் முதன்மை மருத்துவ அதிகாரி சவுந்திரராஜன் இம்முகாமை தொடங்கி வைத்தார். குழந்தைகள் நல மருத்துவர்கள் சுகன்யா மற்றும் ராஜா ஆகியோர் குழந்தைகளை பரிசோதித்து 428 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கினர்.
நாட்டேரி: நாட்டேரி ஆர ம்ப சுகாதார நிலையத்தில் பஞ்., தலைவர் பழனி இம்முகாமை தொடங்கினார். மருத் துவ அதிகாரி ராஜேஷ், சக்கரவர்த்தி, பிரசன்னா, சுகாதார ஆய்வாளர் சம்பத் ஆகியோர் பங்கேற்றனர். முகாமில் ஆயிரத்து 938 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப் பட்டது.