தினமணி 23.02.2010
போலி டீ தூள்; கடைகளில் சோதனை
திருவண்ணாமலை, பிப். 22: டீ கடைகளில் போலி டீ தூள் பயன்படுத்தப்படுகிறதா? என சுகாதாரத் துறை அலுவலர்கள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், துரிஞ்சாபுரம், திருவணணாமலை, தண்டராம்பட்டு, கலசப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் 53 கடைகளில் சுகாதாரத் துறை துணை இயக்குநர் சித்ரா தலைமையிலான குழுவினர் திங்கள்கிழமை திடீர் சோதனை மேற்கொண்டனர். இதேபோல் செய்யாறு, ஆரணி, மேற்கு ஆரணி, செய்யாறு, வந்தவாசி பகுதிகளில் செய்யாறு சுகாதார மாவட்ட துணை இயக்குநர் தேவபார்த்தசாரதி தலைமையிலான குழுவினர் 73 கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
சோதனையின்போது சேகரிக்கப்பட்ட மாதிரிகள் சென்னை கிண்டியில் உள்ள உணவு பகுப்பாய்வுக் கூடத்துக்கு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன. மாதிரியில் கலப்படம் இருப்பது தெரியவந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத் துறை அலுவலர்கள் கூறினர்.